திருச்சி, ஆக.12: திருச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்களை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். புரோக்கராக செயல்பட்ட பெண்ணை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி ரங்கம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் கடந்த 10ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 4 பெண்களை போலீசார் மீட்டு காஜாமலை பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து, புரோக்கராக செயல்பட்ட ரங்கம் பச்சக்கரையை சேர்ந்த மல்லிகா(44) என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மல்லிகாவிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
+
Advertisement