துறையூர், டிச. 9: துறையூர் அருகே சிக்கத்தம்பூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட உயர் நிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த சிக்கத்தம்பூரில் உள்ள ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ரூ. 49 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடத்தை காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் குத்து விளக்கேற்றி மாணவரின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் தர்மன் ராஜேந்திரன், மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


