திருச்சி மாவட்டத்தில் 20.19 லட்சம் செயலியில் பதிவேற்றம் 3.49 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் மறு ஆய்வு
திருச்சி, டிச. 5: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் 20.19 லட்சம் வாக்காளர்கள் விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 3.49 லட்சம் வாக்காளர்கள் விவரங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளும் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

