Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போக்குவரத்து நெரிசலை போக்க தா.பேட்டை புறவழி சாலையில் லாரிகளை இயக்க வேண்டும்

தா.பேட்டை, செப்.2: போக்குவரத்து நெரிசலை போக்க தா.பேட்டை புறவழிச்சாலையில் கனரக வாகனங்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் அமைந்துள்ளது தா.பேட்டை. சுற்றியுள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தா.பேட்டை ஒன்றியம் தலைமை இடமாக இருந்து வருகிறது. தா.பேட்டை கடைவீதி மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சாலை குறுகியதாக இருப்பதால் கனரக வாகனங்கள் பகலில் சென்றால் ஊருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக புறவழிச் சாலை நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான கனரக வாகனங்கள் அந்த புறவழிச்சாலை வழியாக செல்லாமல் ஊருக்குள் வருவதால் பகல் நேரத்திலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணியர்கள், போக்குவரத்து வாகனங்களான பேருந்து, கார், வேன் இருசக்கர வாகனம் போன்றவற்றில் பயணிப்பவர்கள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தா.பேட்டை ராமகிருஷ்ணன் என்பவர் கூறும்போது, தாப்பேட்டை கடை வீதி வழியாக துறையூர் நாமக்கல் சாலை மற்றும் முசிறி மேட்டுப்பாளையம் சாலையில் கனரக வாகனங்களான லாரி லோடு வேன் ஆகியவை செல்வதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதோடு காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகள் மிகுந்த பாதிப்பு அடைகின்றனர். ஒருசில கனரக வாகன ஓட்டிகள் அதி வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனங்களை செலுத்துகின்றனர் இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

அவ்வப்போது கடைவீதிகளில் விபத்துகளும் ஏற்படுகிறது. புறவழிச் சாலையின் துவக்கம் மற்றும் முடிவில் என இரு இடங்களில் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்தி புறவழிச்சாலை வழியாக கனரக வாகனங்களை திருப்பி அனுப்பி அந்த பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வரலாம் தவறும் கனரக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதன் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி கனரக வாகனங்கள் கடைவீதிக்குள் வருவதை தவிர்க்க முடியும். எனவே தா.பேட்டை ஊருக்குள் பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் உள்ளே வராமல் அவற்றிற்காக ஒதுக்கப்பட்ட புறவழிச்சலை வழியாக செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து கடைவீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.