Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தடைகள் பல கடந்து முனைவர் பட்டம் பெற்று திருநங்கை அசத்தல்: பேராசிரியைaயாக பணிபுரிய ஆசை

பெரம்பூர்: வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில திறமை வாய்ந்த மனிதர்களை காலம் சந்திக்கிறது. சில நேரங்களில் அந்த திறமையை பார்த்து நாம் மெய் சிலிர்த்து போவோம். மாற்றுத்திறனாளிகள்திருநங்கைகள் என பலரும் சில நேரங்களில் தங்களது அசாத்திய திறமைகளால் சமூyttகத்தில் ஒரு நல்ல இடத்தை பிடித்து தங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் திருநங்கைகள் என்றால் பாலியல் தொழில் செய்பவர்கள் அல்லது மற்றவர்களிடம் யாசகம் பெற்று பிழைப்பை நடத்துபவர்கள் என்ற நிலையை மாற்றி பல திருநங்கைகள் சமூகத்தில் மிக உயரிய பொறுப்பில் இருப்பதை கண்டுள்ளோம். தற்போது அந்த வரிசையில் தற்ேபாதுகொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் திருநங்கை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு சென்று வேலை வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் விஜயா தம்பதிக்கு இரு பிள்ளைகள். இதில்2வது பிள்ளை ஈஸ்வரி. இவர்கல்லூரி படிப்பு வரை தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்தவாறு படித்து வந்தார்.

அதன் பின்பு திருநங்கையாக மாறிய பிறகு தனது வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு தனது படிப்பை தானே தொடர்ந்தார்.‌ படிப்பு என்றால் சாதாரணமாக படித்துவிடவில்லை அனைத்து படிப்புகளிலும் உச்சத்தை பெற்றுள்ளார். எம்எஸ்சி தாவரவியல் தாவர உயிர்கொள் நுட்பவியல்ஆசிரியர் கல்வியியல் கல்வி. எம்.பில்.கல்வியியல் எஜுகேஷன் சூப்பர் விஷன் மற்றும் அட்மினிஸ்ட்ரேஷன்பிஹெச்டி கல்வியியல் போன்ற படிப்புகளை படித்து டாக்டர் பட்டம் பெற்றுபல்வேறு கல்வி குழுமங்கள் கல்லூரிகள் போன்றவற்றில் பேராசிரியை பணிக்கு திருநங்கை ஈஸ்வரி முயற்சி செய்து உள்ளார். ஆனால் அனைத்து கல்வி தகுதிகளும் இருந்த போதும் திருநங்கை என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்துள்ளார். அதன் பிறகு கொளத்தூர் திரு.வி.க நகரில் உள்ள கே.ஆர்.எம் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துவிண்ணப்பித்த மறுநாளே இவர் பணிக்கு அழைக்கப்பட்டு தற்போது 8ம் வகுப்பு9ம் வகுப்பு10ம் வகுப்பு என 3 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

தற்போது பள்ளியில் நடந்த ஒரு விழா ஒன்றில் கலந்து கொண்ட திருநங்கை வீடியோ மற்றும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் மூலம் இந்த பள்ளியில் திருநங்கை ஆசிரியராக உள்ளார் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தினகரன் நாளிதழுக்கு திருநங்கை ஈஸ்வரி அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியதாவது: இவ்வளவு படிப்புகள் படித்துவிட்டு சிறிய மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது ஒரு சிறிய தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினாலும்வாய்ப்பு இல்லாத நேரத்தில் இந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு ரிசர்ச் பாட பிரிவில் அதிக நாட்டம் இருந்து வந்தது. இதுவரை சுமார் 25 பேப்பர்களுக்கு மேல் பப்ளிஷ் செய்துள்ளேன். 5 புத்தகங்களை எழுதி உள்ளேன். இருப்பினும் கல்லூரி வரை சென்று பாடம் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை.

இதனால் பள்ளியில் பாடம் எடுத்து வருகிறேன். கடந்த 8 மாதங்களாக இந்த பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறேன். இனி வரக்கூடிய இளம் திருநங்கைகளை கண்டிப்பாக பெற்றோர் அவர்களை கைவிடக்கூடாது. திருநங்கையாக இருந்தாலும் அவர்களை வீட்டிலிருந்து வெளியே அனுப்பக்கூடாது அவர்கள் வெளியே வருவதால் தான் அவர்களது வாழ்க்கை மாறி விடுகிறது படிப்பு தங்குமிடம் போன்றவற்றை பெற்றோர்கள் கொடுத்தால் அவர்கள் படித்து நல்ல நிலைக்கு வருவார்கள். படித்த திருநங்கைகள் அனைத்து துறையிலும் உள்ளார்கள் அவர்களுக்கு அரசாங்கம் சரியான முறையில் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.

அப்போது இளைய தலைமுறை திருநங்கைகளுக்கு அவர்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பார்கள். பல்கலைக்கழக அளவில் பேராசிரியராக பணி புரிய வேண்டும் என்பதே எனது லட்சியம் கண்டிப்பாக அது நிறைவேறும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். திருநங்கைகள் என்றால் சமூகத்தில் ஒரு தவறான பார்வை இருந்து வந்தது ஆனால் இந்த திருநங்கை தான் பெற்ற கல்வியின் மூலம் பல மாணவர்களுக்கு கல்வி கற்பித்து சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் இவரது லட்சியம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.