வேப்பனஹள்ளி, ஜூன் 2: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தக்காளி சாகுபடி பிரதானம். குறிப்பாக வேப்பனஹள்ளி பகுதியில் விவசாயிகளின் முக்கிய விளைபொருளாக தக்காளி பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வரத்து அதிகரிப்பு மற்றும் இரட்டிப்பு விளைச்சல் காரணமாக தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்து, கிலோ ரூ.10க்கு விற்பனையானது. இதன் காரணமாக அறுவடை கூலி கூட கிடைக்காமல் விவசாயிகள் கடும் நஷ்டத்திற்குள்ளாகினர். தக்காளியை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் தக்காளி தோட்டங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளனர்.
+
Advertisement


