தேவதானப்பட்டி, ஏப். 22: தேவதானப்பட்டி எஸ்ஐகள் வேல்மணிகண்டன், செல்வராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சில்வார்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில்வார்பட்டி வடக்குதெருவில் உள்ள ராமலிங்கம்(51) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்ஹ்டு போலீசார் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர்.
+
Advertisement


