ஆலங்குளம் அருகே விளைநிலங்களில் சோலார் பேனல்கள் அமைக்க எதிர்ப்பு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்
தென்காசி,ஆக 2: ஆலங்குளம் அருகே விவசாய நிலங்களில் சோலார் பேனல்கள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கல்லத்திக்குளம் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் சோலார் பேனல்கள் அமைத்து சூரிய மின் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த சோலார் பேனல்கள் அமைப்பதற்காக...
தென்காசி,ஆக 2: ஆலங்குளம் அருகே விவசாய நிலங்களில் சோலார் பேனல்கள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கல்லத்திக்குளம் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் சோலார் பேனல்கள் அமைத்து சூரிய மின் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த சோலார் பேனல்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்களில் உள்ள ஏராளமான பயிர்கள் மற்றும் மரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘சோலார் பேனல் அமைக்கும் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அடுத்தகட்டமாக, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகளை உள்ளிட்டவைக்களை ஒப்படைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.