நெல்லை, ஆக. 3: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி மற்றும் பொது சொத்தை சேதப்படுத்திய வழக்குகளில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லை மாவட்டம், அம்பை. முடப்பாலத்தைச் சேர்ந்த காளிதாசின் மகன் இசக்கிமுத்து என்ற முகேஷ் (20), பாஸ்கரின் மகன் சுனில்ராஜ் (19), மகேசின் மகன்...
நெல்லை, ஆக. 3: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி மற்றும் பொது சொத்தை சேதப்படுத்திய வழக்குகளில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லை மாவட்டம், அம்பை. முடப்பாலத்தைச் சேர்ந்த காளிதாசின் மகன் இசக்கிமுத்து என்ற முகேஷ் (20), பாஸ்கரின் மகன் சுனில்ராஜ் (19), மகேசின் மகன் முத்து (21), மேகலிங்கத்தின் மகன் கணேசமூர்ததி (22) ஆகிய 4 பேரும் கல்லிடைக்குறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த ல் கல்லிடைக்குறிச்சி போலீசார் 4 பேரையும் Aகைதுசெய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என நெல்லை எஸ்பி சிலம்பரசன், அம்பை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் (பொறுப்பு) கலெக்டர் சுகுமாரிடம் பரிந்துரைத்தனர். அதன்பேரில் முகேஷ், சுனில்ராஜ், முத்து, கணேசமூர்த்தி ஆகிய 4 பேரும் பாளை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.