Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்காசியில் நாளை நடக்கிறது விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

தென்காசி,ஜூலை 24: தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது என்று தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை 25ம் தேதி காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள்.

எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது செல்போன் எண்ணையும் குறிப்பிட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். விவசாய குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுவிற்கான ஒப்புகையும் மனுவின் கோரிக்கை தொடர்பான விவரங்களும் அனைத்து வகை செல்போன்களிலும் பார்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இக்குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு தென்காசி மாவட்ட விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறியுள்ளார். தென்காசி நகராட்சியில் ரூ.50 லட்சத்தில்

5 இடங்களில் ரேஷன் கடை கட்டுமான பணி தென்காசி,ஜூலை 24: தென்காசி நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிலையத்தில் இருந்து ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என பழனி நாடார் எம்எல்ஏவிடம், சேர்மன் சாதிர் கோரிக்கை விடுத்திருந்தார். இதையேற்று 5 இடங்களில் அமைப்பதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததையடுத்து நேற்று 18வது வார்டில் பூமி பூஜை நடந்தது.

நிகழ்ச்சிக்கு பழனி நாடார் எம்எல்ஏ தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் சாதிர் வரவேற்றார். திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் ஜெயப்பிரியா, சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து, துப்புரவுபணி மேற்பார்வையாளர்கள் சுப்ரமணியன், முத்துக்குமார், முத்து, தென்காசி சட்டமன்ற தொகுதி திமுக மேற்பார்வையாளர் கலை கதிரவன், நகர நிர்வாகிகள் கிட்டு, ராம்துரை, பால்ராஜ், ஷேக்பரீத், மாவட்ட பிரதிநிதி மைதீன் பிச்சை, வார்டு செயலாளர் முகம்மதுரபி, மதிமுக மாவட்ட அவைத்தலைவர் வெங்கடேஷ்வரன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கபாண்டியன், நகர பொறியாளர் அணி அமைப்பாளர் ஹாமீம், நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் சன் ராஜா, அசாருதீன், சந்திரன், கவுன்சிலர்கள் பூமாதேவி முருகன், வசந்திவெங்கடேஷ்வரன், ரபீக், சுப்பிரமணியன், நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், பொது செயலாளர் சந்தோஷ், பொருளாளர் ஈஸ்வரன், இளைஞர் காங்கிரஸ் பிரேம்குமார், சித்திக், பீர்முகமது, சண்முகவேல், பிரபாகரன், சேட் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர இளைஞரணி துணைஅமைப்பாளர் அப்துல் கரீம் நன்றி கூறினார்.