கடையநல்லூர், மே 21: கடையநல்லூரில் உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. ஊர்மேலழகியான் ஆர்.வி.எஸ்.வேளாண்மை அறிவியல் மைய வளாகத்தில் நடந்த முகாமிற்கு கே.வி.ஐ.சி.மதுரை மண்டல இயக்குனர் செந்தில்குமார் ராமசாமி தலைமை வகித்து, விவசாயிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு பற்றியும், அதன் மூலம் வருவாயை எப்படி பெருக்கலாம் என்பது குறித்தும் பேசினார். மதுரை மற்றும் கிராம தொழில்கள் ஆணைய மண்டல அலுவலக துறை அலுவலர் கலிபுர் ரஹ்மான் வரவேற்றார். தலைமை விஞ்ஞானி சுகுமார், தாவரவியல் விஞ்ஞானி பாலசுப்பிரமணியம், ஓவிய ஆசிரியர் முருகேஷ் குமார், மார்த்தாண்டம் தேனி பயிற்சி மைய பொறுப்பாளர் தாஸ், சுரண்டை சர்வதோயா சங்க மேலாளர் சிவவடிவேலன், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் தேனீக்கள் தினவிழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா 10 தேன் கூடுகள் மற்றும் தேனீக்கள் வளர்ப்பதற்கான உப கருவிகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சங்கரன்கோவில் சர்வோதயா சங்க செயலாளர் மாயாண்டி நன்றி கூறினார்.
+
Advertisement


