வந்தவாசி, அக். 29: வந்தவாசி அடுத்த தெள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(36). இவரது வீடு அருகே வசிப்பவர் செல்போன் கடை உரிமையாளர் பிரபாகரன்(39). ஏழுமலை கடந்த 6 மாதத்திற்கு முன்பாக ரூ.1 லட்சம் பிரபாகரனுக்கு கடனாக கொடுத்தாராம். கொடுத்த பணத்தை நேற்று முன்தினம் இரவு ஏழுமலை கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பிரபாகரன் ஏழுமலை கையை கடித்தாராம். இதில் வலி தாங்க முடியாத ஏழுமலை பிரபாகரன் முகத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. ஏழுமலைக்கு ஆதரவாக அவரது மனைவி பிரியாவும், பிரபாகரனை தாக்கினாராம். இதில் காயமடைந்த ஏழுமலை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து ஏழுமலை பிரபாகரன் இருவரும் தனித்தனியே தெள்ளார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள செல்போன் கடை உரிமையாளரை வலைவீசி தேடி வருகின்றார்.
+
Advertisement
