செய்யாறு, செப். 27: செய்யாறு அருகே நடுரோட்டில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் நரசமங்கலம், மாமண்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 வாலிபர்கள் நடுரோட்டில் கத்தியுடன் நின்று பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் மாமண்டூர் மற்றும் சந்தைமேடு பகுதியை சேர்ந்த சதீஷ்(23), சந்தோஷ்(20) என தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
+
Advertisement