Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம் ஆரணி அருகே ஆற்காடு-விழுப்புரம் சாலையில்

ஆரணி, செப். 26: ஆரணி டவுன் பழைய ஆற்காடு சாலை அரசு போக்குவரத்து பணிமனை பகுதியில் உள்ள கமண்டலநாகநதி ஆற்றின் குறுக்கே ஆற்காடு-விழுப்புரம் சாலையில் உயர் மட்ட மேம்பாலம், நெடுஞ்சாலைதுறை திட்டங்கள் அலகின் துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19,20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், உயர்மட்ட மேம்பாலப்பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளதால், விரைவில் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்நிலையில், ஆரணி இருந்து இரும்பேடு வழியாக ஆற்காடு-விழுப்புரம் செல்லும் சாலையில், தனிநபர்கள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சாலையின் இருபுறமும் கோயில், வீடுகள், கடைகள் கட்டி வைத்திருந்தனர்.

இந்த சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், கமண்டல நகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம் பணி முடிந்துள்ளதால், ஆற்காடு சாலையுடன் மேம்பாலம் இணைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. இதனால், ஆரணி அரசு பணிமனையில் இருந்த இரும்பேடு கூட்ரோடு வரை இருபுறமும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்டபொறியாளர் நாராயணன் தலைமையில் நேற்று அதிகாரிகள் மற்றும் எஸ்ஐ ஜெயச்சந்திரன் 20க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்தி அவற்றை அகற்றி, சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, இளநிலைபொறியாளர் வரதராஜன், சாலை ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.