கலசபாக்கம், செப். 23: கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இணைந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திட்ட இயக்குனர் தனபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் செல்ல பாண்டியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்துகொண்டு மகளிர் குழுக்களுக்கு ரூ1.28 கோடி நல திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் மகளிருக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். கலைஞர் வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டணமில்லா மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை புதுமைப்பெண் திட்டங்கள் நிறைவேற்றி வருகிறார். எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பொற்கால ஆட்சி தொடர்ந்தால் தான் பெண்கள் நல திட்டங்கள் நிறைவேறும். பெண்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பிடிஓ ராஜேஸ்வரி, ஒன்றிய திமுக செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன், நகர செயலாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் மஞ்சுளா, சுதாகர், பிச்சாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் மோகன் நன்றி கூறினார்.
+
Advertisement