கண்காணிப்பு கேமராவை கல்லால் அடித்து உடைத்த வாலிபர் கைது தண்டராம்பட்டு அருகே ‘என்னை கண்காணிக்க வைக்கப்பட்டதா’
தண்டராம்பட்டு, செப். 19: ‘என்னை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டதா என்று கல்லால் கேமராவை அடித்த உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தண்டராம்பட்டு அடுத்த ரெட்டியா பாளையம் ஊராட்சியில் தானிப்பாடி காவல் நிலையம் சார்பில் அப்பகுதியில் குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. அந்த கேமராவை அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன்(25) நேற்று மது போதையில் ‘என்னை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கேமராவா‘ என்று கல்லை எடுத்து கண்காணிப்பு கேமராவை உடைத்து உள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தானிப்பாடி காவல் நிலையத்துக்கு தகவல்தெரிவித்ததன்பேரில் எஸ்ஐ ஆகாஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பூவரசனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.