ஆரணி, செப். 19: ஆரணி டவுனில் நேற்று காலை ‘நான் பெரிய ரவுடி’ என கூறி நடுரோட்டில் ரகளை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பஸ்நிறுத்தத்தில் உள்ள சாலையின் நடுவில் நேற்று காலை ஒருவர் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் வாகனங்களை மடக்கி, பொதுமக்களை ஆபசமாக பேசி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டவுன் போலீஸ் எஸ்ஐ ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து, ‘நான் பெரிய ரவுடி என கூறி’ தகராறு செய்து வந்தார். இதனால் போலீசார் அவரை அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்தும், நீண்ட நேரம் அங்கேயே நின்று தகராறு செய்து வந்தார். இதனால் போலீசார் அவரை பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று, நடத்திய விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த சங்கர்(43)தொழிலாளி, என்பது தெரியவந்தது. உடனே, சங்கரை கைது செய்தனர்.
+
Advertisement