திருவண்ணாமலை, அக். 17: திருவண்ணாமலை மாவட்டத்தில், 12 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்த 12 தாசில்தார்கள், மாவட்டத்துக்குள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, செங்கம் தாசில்தாராக பணிபரிந்த ராம்பிரபு, டாஸ்மாக் துணை மேலாளராகவும், அங்கு பணிபுரிந்த எஸ்.முருகன் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபரிந்த வ.ரேணுகா, பறக்கும் படை தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த ஆர்.ராஜராஜேஸ்வரி, பேரிடர் மேலாண்மை தாசில்தாராகவும், ஆரணி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணிபுரிந்த ஆர்.செந்தில்குமர், ஆரணி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆரணி தாசில்தாராக பணிபுரிந்த அ.கவுரி, கலசபாக்கம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த இ.லலிதா, ஆரணி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், எஸ்.அரிகுமார், ஆரணி வட்ட வழங்கல் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், செய்யாறு சிப்காட் தாசில்தார் பி.துரை, ஜமுனாமரத்தூர் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த அ.பாலமுருகன் செய்யாறு சிப்காட் தாசில்தாரராகவும், குறைவு முத்திரை கட்டண தாசில்தார் வி.ராஜேந்திரன், கீழ்பென்னாத்தூர் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த ஆர்.சான்பாஷா, குறைவு முத்திரை கட்டண தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.