கலசபாக்கம், அக். 17: கலசபாக்கம் வட்டத்தில் தொடர் மழை காரணமாக விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் மகசூல் அதிகம் பெற மேற்கொள்ள வேண்டிய குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சபிதா தெரிவித்ததாவது: கலசபாக்கம் வட்டத்தில் சுமார் 19 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது தொடர் மழை பெய்து வருவதால் நெற்பயிரில் துண்டு துளைப்பான் மற்றும் இலை சுருட்டு தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. குருத்துப்பூச்சி எனப்படும் தண்டு துளைப்பானின் தாக்குதலால் இளம் பயிரில் நடு குருத்து வாடி காய்ந்து விடும் இதன் தாக்குதலை கட்டுப்படுத்திட நாற்றுகளை நெருக்கமாக நடுவதை தவிர்த்து தேவையான தழை சத்தினை 3ல் இருந்து 4 முறை பிரித்து விடுதல் வேண்டும். விளக்கு பொறியியினை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிர விட்டு குருத்துப் பூச்சியின் தாய் அத்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் என்றார்.
+
Advertisement