செய்யாறு, அக். 17: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் ரூ.2.95 லட்சம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. செய்யாறு நகரில் பிரசித்தி பெற்ற பால குஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலை துறை செயல் அலுவலர் கு.ஹரிஹரன், ஆய்வர் ஜெ.மாதவன், மேலாளர் எல்.ஜெகதீசன் மற்றும் கோயில் பணியாளர்கள் வீடியோ பதிவுடன் கோயிலில் உள்ள நிரந்தர உண்டியல் 10 திருப்பணி உண்டியல், கோ சாலை உண்டியல் உட்பட 12 உண்டியல்கள் நேற்று திறந்து காணிக்கைகள் எண்ப்பட்டன. இதில் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 600 காணிக்கையாக பெறப்பட்டது. பெறப்பட்ட உண்டியல் காணிக்கை தொகை கோயில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
+
Advertisement