ஆரணி, செப்.17: ஆரணி அருகே செலவுக்கு பணம் கேட்ட தகராறில் தந்தை மண்டையை பீர்பாட்டிலால் உடைத்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சைமுத்து(44), விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஆகாஷ்(20) என்ற மகன் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பச்சைமுத்து வீட்டில் இருந்தார். அப்போது, வீட்டிற்கு வந்த மகன் ஆகாஷிடம் செலவிற்காக ரூ.100 பணம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பணத்தை தர மறுத்த ஆகாஷ், எப்போது பார்தாலும் எதற்காக என்னிடம் பணம் கேட்கிறாய் என அசிங்கமாக திட்டினாராம்.
+
Advertisement