செய்யாறு, அக்.16: செய்யாறு அருகே மின்சாரம் பாய்ந்து தச்சுத்தொழிலாளி பரிதாபமாக பலியானார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த நீலகண்டராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கணபதி(35), தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கணபதி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த செய்யாற்றைவென்றான் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்து தச்சு வேலை செய்து வந்தார். அதேபோல், நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தபோது மரக்கட்டைகளை அறுத்த வைத்திருந்த இயந்திரத்தின் மின் வயரை எதிர்பாராமல் மிதித்தாக தெரிகிறது. இதனால் மின்சாரம் பாய்ந்து கணபதி தூக்கி வீசப்பட்டார். இதில், படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கணபதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சித்ரா அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement