ஆரணி, செப்.12: ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தாலுகா போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலன், எஸ்ஐ அருண்குமார் மற்றும் போலீசார் பையூர் கிராமத்தில் உள்ள ஒரு பங்க்கடையில் சோதனை செய்தனர். அப்போது, கடையில் போதை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும், விசாரணையில், பையூர் பிராமணர் தெருவை சேர்ந்த அன்பரசு(40),என்பதும், அதேபகுதியில் பங்க்கடை வைத்து நடத்தி வருவதும், கடந்த சில தினங்களாக கடையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, போலீசார் பங்க்கடையில் பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 700 கிராம் ஹான்ஸ் மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து, அன்பரசை கைது செய்து, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.