கைப்பந்து போட்டியில் அசத்திய கல்லூரி மாணவிகள் நிறைவு விழா இன்று நடக்கிறது திருவண்ணாமலையில் முதலமைச்சர் கோப்பைக்கான
திருவண்ணாமலை, அக்.11: திருவண்ணாமலையில், கல்லூரி மாணவிகளுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியின் நிறைவு விழா இன்று நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை கைப்பந்துப் போட்டிகள் கடந்த 2ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக, பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் கடந்த 5ம் தேதி வரை நடந்தது. அதன் தொடர்ச்சியாக, கல்லூரி மாணவிகளுக்கான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டிகள் கடந்த 8ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில், 38 மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடந்த 3 நாட்களாக நடைபெறும் கல்லூரி மாணவிகளுக்கான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடக்கிறது. அதன் நிறைவாக, நிறைவாக இன்று மாலை 3 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெறும். மாநில அளவிலான இப்போட்டியில், முதலிடம் பிடிக்கும் அணிக்க ரூ.12 லட்சம், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.8 லட்சம், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.