செய்யாறு, செப். 10: வீட்டின் பாத்ரூமில் பெண் குளித்து கொண்டிருப்பதை செல்போனில் போட்டோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 41 வயது பெண். திருமணமாகி கணவருடன் வசிக்கிறார். இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்துள்ளார். இதை தெரிந்து கொண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வராஜ்(31) என்பவர் பாத்ரூமின் ஜன்னல் வழியாக செல்போனில், பெண் குளிப்பதை ரகசியமாக போட்டோ எடுத்துள்ளார். அப்போது இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அவரது கணவர் அங்கு விரைந்து வந்தார். இதை பார்த்த செல்வராஜ் தப்பியோடினார். ஆனால் அப்பெண்ணின் கணவர், விரட்டிச்சென்று செல்வராஜை பிடித்துள்ளார். இதில் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செல்வராஜ், ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தூசி போலீசில் நேற்று முன்மினம் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.