Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

செண்பகத்தோப்பு அணை திறப்பு படவேடு அருகே

கண்ணமங்கலம், அக். 8: திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே உள்ள செண்பகத்தோப்பு அணையிலிருந்து நீர் ஜவ்வாது மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக செண்பகத் தோப்பு அணையில் வினாடிக்கு 121 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 62.32 அடியாகும். எனவே வினாடிக்கு 121 கன அடி நீர் அணைக்கு வந்து சேர்வதால் அணையின் நீர்மட்டம் தற்போது 57. 83 அடியாக. உயர்ந்துள்ளது. மேலும் அணையின் நீரின் கொள்ளளவு மொத்தமாக 287 மில்லியன் தற்போது அதிக நீர் வரத்து காரணமாக 242 மில்லியன் இருப்பு உள்ளது.

இதனால் பொதுப்பணி மற்றும் நீர்வளத் துறையின் பரிந்துரையின்படி அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 150 கன அடி நீரை அணையின் இரண்டு மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது படவேடு, சந்தவாசல், களம்பூர் வெள்ளுர் ஆகிய கிராமங்களின் வழியாகச் சென்று ஆரணியில் கமண்டல நாகநதியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த கமண்டல நாகநதி ஆறானது ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கு மிக முக்கியமான நதியாக கருதப்படுகிறது. ஆற்றில் வெள்ளம் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரி, குளம், நீர் ஆதார கால்வாய்கள்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இதனால் 5000 ஹெக்டேர்க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கமண்டல நாகநதி ஆறானது ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களின் விவசாயத்திற்கு பெரிதும் பாசன வசதி பெற காரணமாக உள்ளது. மேலும், செய்யார், வந்தவாசி, திண்டிவனம், மேல்மருவத்தூர், மரக்காணம், வழியாக புதுச்சேரி சென்று பின்னர் கடலில் கலக்கிறது. தற்போது செண்பகத் தோப்பு அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.