வந்தவாசி, அக். 7: வந்தவாசி கோட்டை 2வது வார்டு பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவியர் விடுதி ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர் எ.வ.வேலு முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து வந்தவாசியில் உள்ள மாணவர் விடுதி கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் ஜலால், துணைத் தலைவர் சீனிவாசன், நகரச் செயலாளர் தயாளன், கவுன்சிலர்கள் கிஷோர் குமார், அன்பரசு, ஷீலா மூவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர பொருளாளர் ராஜா பாஷா, மாவட்ட பிரதிநிதிகள் அன்சாரி, பாபு, குடியரசு, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராமு, தொழிலாளர்களின் மாவட்ட துணை அமைப்பாளர் கோபிநாதன், சுற்றுச்சூழல் மாவட்ட துணைத் தலைவர் விநாயக மூர்த்தி, கவுன்சிலர்கள் நாகூர் மீரான், சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement