செய்யாறு, ஆக.7: செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுகாவில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலை திடீரென கருமேக கூட்டங்கள் சூழ்ந்தது. பின்னர், இரவு 8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக செய்யாறு நகரிலும், சுற்றுவட்டார பகுதிகளான கீழ்புதுப்பாக்கம், தூளி, பாப்பாந்தாங்கல், சிறுங்கட்டூர், பூதேரிபுல்லவாக்கம், மோரணம், வடதண்டலம், அருகாவூர், தண்டரை, பெரும்பள்ளம், வடுக்கப்பட்டு, சேராம்பட்டு, தவசி, இருங்கல், செங்காடு, கீழ்மட்டை, வெள்ளை, செய்யாற்றைவென்றான், அனக்காவூர், விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் மீண்டு நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
+
Advertisement