திருவண்ணாமலை, ஆக.5: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சுவாமி வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் இந்திர விமான வாகனத்திற்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் நாட்களில் சுவாமி வீதி உலாவுக்கு பயன்படுத்தும் வாகனங்களில் முக்கியமானது இந்திர விமான வாகனம். இந்த வாகனத்துக்கு மரச்சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. திறந்து பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டதால்...
திருவண்ணாமலை, ஆக.5: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சுவாமி வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் இந்திர விமான வாகனத்திற்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் நாட்களில் சுவாமி வீதி உலாவுக்கு பயன்படுத்தும் வாகனங்களில் முக்கியமானது இந்திர விமான வாகனம். இந்த வாகனத்துக்கு மரச்சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. திறந்து பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டதால் மரச்சக்கரங்கள் பழுது ஆனது. எனவே, இந்திர விமான வாகனத்தின் மரச்சக்கரங்களை அகற்றிவிட்டு ரூ.2.50 லட்சம் மதிப்பில் இரும்பு சக்கரங்கள் நேற்று பொருத்தப்பட்டன. தொடர்ந்து, இந்திர விமான வாகனத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதேபோல், சுவாமி வீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் மற்ற வாகனங்களிலும் மரச்சக்கரங்களை படிப்படியாக அகற்றி விட்டு, இரும்பு சக்கரங்கள் பொருத்த கோயில் நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.