Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

திருவண்ணாமலை, ஆக.5: திருவண்ணாமலை அடுத்த தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி செல்வி(42). திருவண்ணாமலையில் உள்ள ஒரு பாத்திர கடையில் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கமபோல வேலையை முடித்துவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். திருவண்ணாமலை- மணலூர்பேட்டை சாலையில் கண்ணமடை காட்டுப்பகுதி அருகே பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 வாலிபர்கள், செல்வி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் தச்சம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.