ஆரணி, அக். 4: ஆரணி அடுத்த சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், ஆரணி தாலுகா போலீஸ் எஸ்ஐகள் அருண்குமார், மகாராணி மற்றும் போலீசார் நேற்று சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண்ணை போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் இவரது மனைவி விஜயலட்சுமி(32), அவர் போதை பொருட்கள் விற்றுவந்தது தெரியவந்தது. உடனே, அவரது வீட்டில் சோதனை செய்தபோது, பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
+
Advertisement