செய்யாறு, ஆக. 2: செய்யாறு அடுத்த காழியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி(34). இவர் செய்யாறு-காஞ்சிபுரம் புதிய சாலை பகுதியில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்கிறார். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த குப்பன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறதாம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ஓட்டலில் ரஜினி வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குப்பன்...
செய்யாறு, ஆக. 2: செய்யாறு அடுத்த காழியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி(34). இவர் செய்யாறு-காஞ்சிபுரம் புதிய சாலை பகுதியில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்கிறார். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த குப்பன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறதாம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ஓட்டலில் ரஜினி வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குப்பன் மகன் பிரபா, ரஜினியை வெளியே அழைத்து பேசி தகராறு செய்துள்ளார், அவர்களை பொதுமக்கள் சமாதானம் செய்தனர். பின்னர் வேலை முடிந்து வீடு திரும்பிய ரஜினியை அவரது வீட்டின் அருகே குப்பன், அவரது மகன்கள் பிரபா, சின்னராஜ், பிரகாஷ், உறவினர்கள் பாரதி, பிரவீண், புருஷோத்தமன் ஆகிய 7 பேரும் வழிமறித்து தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த அவரது மனைவி சுகன்யாவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து ரஜினி செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து பிரவீண்(25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள குப்பன் உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர்.