ஆரணி, ஆக.4: ஆரணி அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த பெயிண்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண். குடும்ப தகராறு காரணமாக கணவனை பிரிந்து, 4 வயது பெண் குழந்தையுடன் தனது தாய்...
ஆரணி, ஆக.4: ஆரணி அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த பெயிண்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண். குடும்ப தகராறு காரணமாக கணவனை பிரிந்து, 4 வயது பெண் குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மகளை தனது பெற்றோர்களிடம் விட்டுவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமியின் தாத்தா, பாட்டி வேலைக்கு சென்றிருந்தனர்.
அப்போது, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் அங்கு வந்த ஒருவர் பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், வேலை முடித்து வீட்டுக்கு வந்த தாத்தா, பாட்டி சிறுமி அழுது கொண்டிருந்ததை கண்டு விசாரித்தனர். பின்னர், ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் பாட்டி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தச்சூர் சமத்துபுரத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெயிண்டர் ரவிச்சந்திரன்(45) என்பவரை கைது செய்தனர். பின்னர், அவரை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.