Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

(தி.மலை) குழந்தைகளின் பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல் பிறப்பு பதிவேடுகளில் விடுபட்டுள்ள

திருவண்ணாமலை, மே 31: திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறப்பு பதிவேடுகளில் பதிவு செய்யாமல் விடுபட்ட குழந்தைகளின் பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருப்பதாவது: சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். பிறப்பு சான்று என்பது குடும்ப அட்டையில் பெயர் சேர்த்திட, பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, வயது குறித்த ஆதாரம், ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெற அவசியமாகும். திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000ன்படி 1.1.2000க்கு முன்பு வரையிலான ஆண்டுகளில் குழந்தையின் பெயரைக் குறிப்பிடப்படாமல் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்பு பதிவுகளில் 31.12.2014 வரை பெயர் பதிவு செய்ய அரசால் ஏற்கனவே வழிவகை செய்யப்பட்டது.

பின்னர், மேலும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 31.12.2019 வரையிலான கால அவகாசம் முடிவுற்றது. இந்நிலையில், குழந்தையின் பெயர் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தையின் பெயர் பதிவு செய்திட 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து இந்திய தலைமை பதிவாளரால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களில் பிறப்பு பதிவேடுகளில் விடுபட்டுள்ள குழந்தை பெயரை பதிவு செய்வதற்கு அரசு அளித்துள்ள கால அவகாச நீட்டிப்பு காலத்தை, பொதுமக்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.