Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கரும்பு நிலுவை தொகையில் 50 சதவீதம் ₹13.18 கோடியை வழங்கியது விவசாயிகள் மகிழ்ச்சி போளூர் தனியார் சர்க்கரை ஆலை

போளூர், ஜூன் 5: போளூர் தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் 50 சதவீதமான ₹13.18 கோடி வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கரைப்பூண்டி தரணி சர்க்கரை ஆலை கடந்த 1996ம் ஆண்டு துவக்கப்பட்டது. தொடர்ந்து, 40 கிராமங்கள் ஒதுக்கப்பட்டு அனைத்து கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த கரும்புகளை ஆலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கரும்பு உற்பத்தியும் அதிகரித்து வந்தது. இந்நிலையில், கரும்பு விவசாயிகளுக்கு 2016ம் ஆண்டு அரவை பருவம் முடிந்ததும் ஆலை வழக்கம்போல் மூடப்பட்டது.

அப்ேபாது, விவசாயிகளுக்கு நிலுவை தொகையாக ₹26 கோடியே 36 லட்சம் வைத்திருந்தது. இதனை வழங்க தாமதம் ஆனது. இதனால் கரும்பு உற்பத்தி குறைந்தது. மேலும், நிலுவை தொகை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் போராடி வந்தனர். இதையடுத்து, வழக்கு தொடரப்பட்டு பின்னர் தேசிய தீர்ப்பாயத்தின் மூலம் விசாரணை நடந்து தரணி சர்க்கரை ஆலை மட்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவதாக அறிவித்தது. பின்னர், சென்னையில் தரணி சர்க்கரை ஆலை அதிபர் கே.பழனிசாமி தலைைமயில் போளூர், வாசுதேவநல்லூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 ஆலை பகுதி கரும்பு விவசாயிகள், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் போளூர் கே.வி.ராஜ்குமார் மற்றும் சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

அப்போது, ஆலை அதிபர் கே.பழனிசாமி பேசுகையில், எங்களது ஆலைகளுக்கு 2018-2019ம் ஆண்டு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை கணக்கீடு செய்து முதலில் 50 சதவீதத்தை மே மாதமும், பிறகு 2 தவணையாக ஆகஸ்ட், நவம்பர் ஆகிய மாதங்களில் 25 சதவீதமும் தருவதாக உறுதியளித்தார். அதன்படி, போளூர் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ₹26 கோடியே 36 லட்சத்தில் 50 சதவீதம் தொகையான ₹13 கோடியே 18 லட்சத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கப்பட்டது.

இதற்காக போளூர் தரணி சர்க்கரை ஆலையை சேர்ந்த பொதுமேலாளர் எம்.செங்குட்டுவேலு ஆலைக்கு அழைத்து வழங்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமேலாளர்(நிர்வாகம்) பெ.கந்தசாமி, உதவி பொதுமேலாளர் ஏ.குணசேகரன் ஆகியோர் அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக சென்று விவசாயிகளின் தொகைக்கான காசோலையை வழங்கினர். விவசாயிகளது 6 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு, வீடு தேடி வந்து நிலுவை தொகையை வழங்கிய ஆலை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர். மேலும், நிலுவை தொகை வந்ததால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.