வந்தவாசி, ஆக.11: வந்தவாசி அருகே வீடு புகுந்து காஸ் சிலிண்டர் அடியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர்.வந்தவாசி அடுத்த கொண்டையாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி கஸ்தூரி(60). இவரது கணவர் இறந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் சேமித்து வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை வீட்டின் உள்ள காஸ் சிலிண்டர் அடியில் மறைத்து வைத்திருந்தாராம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் கஸ்தூரி கதவை அடைத்து விட்டு வெளிப்பகுதி வராண்டாவில் படுத்து இருந்தாராம். அப்போது, வீட்டின் உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கஸ்தூரி காஸ் சிலிண்டர் அடியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த கஸ்தூரி தெள்ளார் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்கு பதிவு செய்து, அங்கு பணம் வைத்திருப்பதை தெரிந்தவர்கள் தான் திருடி இருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.