மேல் செங்கம் பகுதியில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும்: மக்களவையில் எம்பி அண்ணாதுரை கோரிக்கை
திருவண்ணாமலை, டிச.8:மேல் செங்கம் பகுதியில் உள்ள பத்தாயிரம் ஏக்கர் வனப்பகுதியில் மூலிகை மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும் என எம்பி அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது, திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்செங்கம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வன நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
பரந்து விரிந்துள்ள இந்த பகுதி, நிலையான வளர்ச்சி, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது.


