திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க மண்டல மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நன்றி தெரிவிப்பு
திருவண்ணாமலை, செப்.2: திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவை சந்தித்து, ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் நன்றி தெரிவித்தனர். திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க மண்டல மாநாடு திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கத்தில் கடந்த 24ம் தேதி நடந்தது.அதில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவிசெழியன், முன்னாள் எம்பி டிகேஎஸ் இளங்கோவன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே. கம்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த மாநாட்டில் 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்ததற்காக அமைச்சர் எ.வ.வேலுவை, திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.அப்போது, திராவிடக் கருத்துகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்பாக இது போன்ற மாநாடுகளை நடத்தும் சங்கத்தினருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
அப்போது, திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில தலைவர் இர.அண்ணாதுரை, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் இளங்கோ, தனிஸ்லாஸ், அயோத்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் இரா.பிரசன்னா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க மண்டல மாநாட்டில் கலந்து கொண்டதற்காக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு, சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இர.அண்ணாதுரை தலைமையில் நன்றி தெரிவித்தனர். உடன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ, தனிஸ்லாஸ், பிரசன்னா.