திருவண்ணாமலை, டிச.1: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ‘அரோகரா’ முழக்கம் விண்ணதிர அசைந்தாடியபடி மகாரதம் மாடவீதியில் பவனி வந்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவில் 6ம் நாளன்று வெள்ளித்தேரோட்டமும், 7ம் நாளன்று மரத்தேர் எனப்படும் மகா ரதம் பவனியும் நடைபெறுவது வழக்கம்.

