திருத்தணி: பொது இடத்தில் கையில் வீச்சரிவாள் வைத்துக்கொண்டு எஸ்.ஐக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளராக குணசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை போலீசாருடன் சென்னை பைபாஸ் சாலையில் காசிநாதபுரம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அங்கு கையில் வீச்சரிவாள் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி மிரட்டும் செயல்களில் ஈடுட்ட 2 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அப்போது வாலிபர்கள் எஸ்.ஐ.குணசேகருக்கு மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்.ஐ. கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் (22) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய அபிஷேக் (19 என்பவரை தேடி வருகின்றனர்.