திருவள்ளூர், அக்.9: திருவள்ளூர் மாவட்டத்தில் எல்கேஜி சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள், ஆர்டிஇ 25 சதவீத இட ஒதுக்கீடு பெற்றிட உரிய சான்றிதழ்களை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2025-2026 கல்வி ஆண்டில் 30.09.2025 நிலவரப்படி நுழைவுநிலை வகுப்பில் எல்கேஜி சேர்க்கை செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்டிஇ 25 சதவீத இட ஒதுக்கீடு பெற்றிட உரிய சான்றிதழ்களையும் வயது, வருமானம், சாதி, இருப்பிடம் மற்றும் சிறப்பு உரிமை மற்றும் உறுதிமொழி படிவத்தினை பள்ளி முதல்வர்களிடம் பெற்று அந்தந்த பள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கு இன்றுதான் கடைசி தேதி. ஆர்டிஇ 25 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி தகுதியுடைய மாணவர்களின் இறுதிப் பட்டியல் வரும் 14ம்தேதி அந்தந்த பள்ளிகளில் தகவல் பலகையில் வெளியிடப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.