ஆர்.கே.பேட்டை, அக்.9: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பெரிய நாகப்பூண்டி ஊராட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று வட்டாட்சியர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. முகாமில் 15க்கும் மேற்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து 446 மனுக்களை பெற்றனர்.
முகாமில், புதிய ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு, வாரிசு போன்ற சான்றுகள் என 10க்கும் மேற்பட்டோருக்கு உடனே வழங்கப்பட்டது. முகாமில் ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், மெல்கிராஜா சிங், பெரிய நாகப்பூண்டி ஊராட்சி செயலாளர் ஹரிபாபு, முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் சிவக்குமார், அனைத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.