திருவள்ளூர், ஆக.5: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், எல்லாபுரம் ஒன்றியம், காக்கவாக்கம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப்பள்ளி மிகவும் பழுதடைந்து விட்டதால், அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், இந்த பள்ளி கட்டிடம் 2 ஆண்களுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பள்ளி...
திருவள்ளூர், ஆக.5: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், எல்லாபுரம் ஒன்றியம், காக்கவாக்கம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப்பள்ளி மிகவும் பழுதடைந்து விட்டதால், அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், இந்த பள்ளி கட்டிடம் 2 ஆண்களுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும், இதுவரை புதிய பள்ளி கட்டிடம் கட்ட ஆதிதிராவிட நலத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததால் மகளிர் சங்க கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது. எனவே, மாணவ - மாணவிகளின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால், விரைந்து புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் தலைமையில், கிராம பெரியோர்கள் அல்லிமுத்து, சின்னையன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளனர்.