திருப்பூர், செப். 16: பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மத்திய மாவட்ட செயலாளா், செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதில் தெற்கு மாநகர செயலாளா் டி.கே.டி.மு.நாகராசன், கவுன்சிலா்கள் பி.ஆர்.செந்தில்மார், செந்தூர் முத்து மற்றும் தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளா் எம்.எஸ்.ஆர்.ராஜ் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.