அவிநாசி, அக். 14: அவிநாசி அடுத்த கணியாம்பூண்டியில் கே.சி.எம்.பவுண்டேஷன் சார்பில் ‘பசுமையை நோக்கி’ மாரத்தான் போட்டி நடந்தது. இதில், கணியாம்பூண்டியில் துவங்கி, தீரன் சின்னமலை கல்லூரி வரை என ஒரு கி.மீ. முதல் 12 கி.மீ. வரை பல்வேறு பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 8 வயது முதல் 50 வயதுக்கு மேற்பட்டோர் வரை ஆண்கள், பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ரஞ்சித், ஆடிட்டர் சுந்தரராமன் ஆகியோர் பரிசு வழங்கினர். விழாவில் ஊராட்சி முன்னாள் தலைவர் மாரிமுத்து, சுதாகர் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.
+
Advertisement