திருப்பூர், அக். 14: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் மனிஷ் துவக்கி வைத்தார். இந்த பேரணியில் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் முடிவடைந்தது.மேலும், மழை நீரை சேகரிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த பேரணியில் நிர்வாகப்பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) முத்துச்சாமி, உதவி நிர்வாக பொறியாளர் பிரகாஷ், துணை நில நீர் வல்லுநர் துரைசாமி. உதவி நில நீர் வல்லுநர் கிரிராஜா, உதவிப்பொறியாளர் சீதாலட்சுமி மற்றும் கல்லூரி மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement