பந்தலூர், அக்.13: நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம், சேரம்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட கொளப்பள்ளி காவயல் டேன்டீ பகுதியில் ஏராளமான தொழிலாளர்களின் குடியிருப்புகள் உள்ளது.
இந்நிலையில், தொழிலாளர்கள் குடியிருப்புகளை ஒட்டி காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டு வருவதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். பசுந்தேயிலை பறிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டு யானைகளால் யானை மனித மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் அகழி மற்றும் மின்வேலிகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.