திருப்பூர், அக்.13: திருப்பூர், குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் 31 வயது பெண். இவர் கடந்த 9ம் தேதி வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் குளிப்பதை வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அருகே வசிக்கின்ற மற்றொரு பெண் கூச்சலிட்டார். இதனை தொடர்ந்து வீடியோ எடுத்த அந்த வாலிபர் தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் திருமுருகன்பூண்டி போலீசில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது திருப்பூர்,நெருப்பெரிச்சல், தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்த முகமது அனஸ் (28) என்பது தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் முகமது அனஸ்சை கைது செய்து சிறையிலடைத்தனர்.