பல்லடம், அக். 11: பல்லடத்தில் அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பாக பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். பல்லடம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சாகுல் ஹமீது, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் ஹெலன் ரூபி, சேக்ஸ்பியர், நதியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.