உடுமலை,அக்.10:உடுமலை சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. பெதப்பம்பட்டியில் அதிகபட்சமாக 75 மிமீ மழை பதிவாகி உள்ளது. திருமூர்த்தி அணையில் 12 மிமீ, அமராவதி அணையில் 5 மிமீ, நல்லாற்றில் 72 மிமீ மழை பெய்துள்ளது.தென்மேற்கு பருவமழை முடிந்து, வடக்கு கிழக்கு பருவமழை துவங்கும் தருவாயில் உள்ளது. இன்னும் வடகிழக்கு பருவமழை முறையாக துவங்கவில்லை. இதற்கிடையில் 2 வார இடைவெளிக்கு பிறகு பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் நேற்று நீர்மட்டம் 71.49 அடியாக இருந்தது. 317 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 29 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 40.12 அடியாக இருந்தது. 861 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 1,066 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.